இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே இந்த கருவிகளை பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே இந்த கருவிகளை பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2013-ம் ஆண்டு இரு சக்கர வாகனம் மீது காஞ்சிபுரம் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டதால், கூடுதல் இழப்பீடு கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.
பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டை 18 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி நீதிபதிகள் நிர்ணயித்தனர்.
அந்த தொகையை 2013ஆம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.
இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேக செல்வதே காரணம் என தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
newstm.in