முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்குகிறார்.. நாள், கூட்டணி குறித்து இப்போதே அறிவிப்பு !

முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்குகிறார்.. நாள், கூட்டணி குறித்து இப்போதே அறிவிப்பு !

Update: 2021-04-11 17:53 GMT

ஒன்றுபட்ட ஆந்திர மாநில முதல்வராக கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அதன்பின்னர் 2009ல் நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் அவா் உயிரிழாந்தார். 

அதன்பின்னர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிபெற்றார். அந்த வகையில், ஆந்திர முதல்வராகவும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். அந்த தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வருவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அவரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி. 

இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷா்மிளா தெலங்கானா மாநிலத்தில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் ஏற்கனவே இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் தனது தந்தையின் ஆதரவாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஷா்மிளா புதிய கட்சியைத் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்முடிவில் புதிய கட்சி தொடங்கும் தேதியை அவர் தற்போது அறிவித்துள்ளார்.

அதன்படி அவரது தந்தையின் நினைவு நாளான ஜூலை 8ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார் ஷர்மிளா ரெட்டி. மேலும், அன்றைய தினமே கட்சியின் பெயர், கொடி, கொள்கையை அறிவிப்பதாகவும் கூறினார். எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்துள்ளார்

அதேநேரத்தில் அண்ணன் ஆந்திராவிலும், தங்கை தெலுங்கானாவிலும் ஆட்சியை கைக்குள் வைத்திருக்க முயற்சி செய்வதாக எதிர்கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:    

Similar News