அமெரிக்காவில் சலசலப்பு... அதிபரின் நம்பிக்கையை பெற்ற இந்திய வம்சாவளி ராணுவ அதிகாரி திடீர் விலகல்
அமெரிக்காவில் சலசலப்பு... அதிபரின் நம்பிக்கையை பெற்ற இந்திய வம்சாவளி ராணுவ அதிகாரி திடீர் விலகல்
அமெரிக்க அதிபராக கடந்தாண்டு பொறுப்பேற்ற ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி கவுரவித்துள்ளார். குறிப்பாக அதிபருக்கு நெருக்கமான நம்பிக்கையான இடங்களிலும் இந்தியர்களை நியமித்தார்.
அந்த வகையில், வெள்ளை மாளிகையின் தலைமை ராணுவ அதிகாரி பணி மிக முக்கியமானது. ஏனெனில், அதிபரின் உள்ளூர் சாலைப் போக்குவரத்து, வெளிநாட்டு பயணம், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள், தகவல் பாதுகாப்பு, உணவு சேவை, மருத்துவம் என அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒட்டு மொத்த பாதுகாப்புக்கும் இந்த தலைமை ராணுவ அதிகாரியே பொறுப்பாவார்.
இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்பதவியில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஜூ வர்கீஸ் என்பவர் இருந்து வந்தார். அவரது பணியும் சிறப்பாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட காரணத்துக்காக தலைமை ராணுவ அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார் மஜூ வர்கீஸ்.
அதிபர் தேர்தலில் போட்டியிட பைடன் தேர்வானது, 2020 அதிபர் தேர்தல் பிரசாரம், பைடனின் வெள்ளை மாளிகை பயணம் என அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும், மூத்த ஆலோசகர், தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் நீண்ட காலம் வர்கீஸ் இருந்துள்ளார். பைடனின் நம்பிக்கைக்குரிய இவர், ஒபாமா அதிபராக இருந்தபோதும் அவருடன் பணியாற்றியவர். இந்த நிலையில், இவருடைய திடீர் பதவி விலகல், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in