ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றே கூறலாம். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள சாயோ ஜெங்லோ நகரில் ஆண்ட்ரே மற்றும் கிறிஸ்டினா மச்சாடோ (33) தம்பதி வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி இரவில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

அவர்களுக்கு சண்டை நடப்பது வழக்கம்தான் என்றாலும் அன்று கேடும் ஆத்திரம் அடைந்த மனைவி கிறிஸ்டினா, தன்னுடைய கணவர் ஆண்ட்ரேவை கொலை செய்துவிட்டார். இதனிடையே அவர்கள் வீட்டில் நடப்பது குறித்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கூறினர்.

இதனையடுத்து அங்குசென்ற போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கொல்லப்பட்ட ஆண்ட்ரேவின் உடல் நிர்வாணமாகவும்,  உடல் சிதைக்கப்பட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து கிறிஸ்டினாவிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சண்டையின்போது இருவரும் நிரந்தரமாக பிரிவது என முடிவெடுத்தனர். பின்னரும் சண்டனை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கிறிஸ்டினா கூறினார். இதனையடுத்து கணவரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து அதை வாணலியின் வைத்து சோயா எண்ணெய்யில் போட்டு பொறித்துள்ளார். இந்த தகவல்களை கேட்ட போலீசார் மிரண்டுள்ளனர். கொலை செய்ததுடன், உடலை சிதைத்தது போன்ற குற்றங்களுக்காக கிறிஸ்டினாவை கைது செய்தனர்.

கிறிஸ்டினாக்கு மனநல குறைபாடு இருக்கலாமோ என்ற கோணத்திலும் மருத்துவர்களின் உதவியை போலீசார் நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வரும் அதே நேரத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags: