சிறுமியை கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!
சிறுமியை கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்.. விசாரணையில் பகீர் பின்னணி !!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கொலை செய்ய கிணற்றில் தள்ளிவிட்ட இளைஞரின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைதில் உள்ள ஒரு கிராமத்தில் கழிவறை வசதிகள் இல்லை. இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் மாலைணில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்வெளி பக்கம் சென்றுள்ளார். அங்கு வந்த ஒருவர் அந்தச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தன்னை போலீசில் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்துவிட்டதாக கருதிய அந்நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
ஆனால், கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியைப் பிடித்து கிணற்றின் மேலேறி வந்துள்ளார். பின்னர் சிறுமி வீட்டிற்குச் சென்று தனக்கு நடந்த கொடூரத்தை கூறி அழுதுள்ளளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்த விசாரணைக்கு பிறு அந்த குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நபர் உள்பட இதுபோன்ற கொடூரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in