பிரபல உணவகத்தில் பாத்ரூமில் பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்!!

பிரபல உணவகத்தில் பாத்ரூமில் பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்!!

Update: 2022-01-29 17:31 GMT

சென்னயைில் பிரபல சங்கீதா உணவகத்தில் பாத்ரூமில் செல்போன் வைத்து பெண்களை வீடியோ எடுத்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரவாயல் திமுக மகளிர் அணி நிர்வாகியான பாரதி என்பவர், கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சங்கீதா ஓட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் உள்ள பாத்ரூமை பயன்படுத்த செல்லும் போது, பாத்ரூமில் உள்ள சுவற்றில் அட்டைப் பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.

அதை எடுத்துப் பார்க்கும் போது செல்போனில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தன்னுடன் வந்த உறவினர்களோடு செல்போனை பறிமுதல் செய்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டார்.

உடனடியாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். விசாரணை செய்ததில் உணவக ஊழியர் கண்ணன் என்பவர், தனது செல்போனை பாத்ரூமில் வைத்து பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது. உணவக ஊழியர் கண்ணனை காவல் நிலையம் அழைத்து சென்ற கிண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கண்ணன் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். குற்றச்சாட்டில் சிக்கிய உணவக ஊழியர் கண்ணன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 3 மாதமாகத்தான் உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த திமுக மகளிரணி நிர்வாகி பாரதி, ஒரு கும்பலாக சேர்ந்து இதுபோன்று பாத்ரூமில் பெண்களை வீடியோ படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸார் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கண்ணனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Similar News