பிக்பாஸை அடுத்து போட்டியில் களமிறங்கிய பிரபல நிறுவனம்! தூங்குவதற்கு 10 லட்சம் பரிசு !!
பிக்பாஸை அடுத்து போட்டியில் களமிறங்கிய பிரபல நிறுவனம்! தூங்குவதற்கு 10 லட்சம் பரிசு !!
அலுவலக நேரத்தில் தூங்கினால் மேலதிகாரியிடம் இருந்து பாட்டு வரும் என்ற காலமெல்லாம் போய், தற்போது தூங்குவதையே வேலையாக பார்க்கக் கூடிய காலமாக மாறிவிட்டது.
தூக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் வேக்ஃபிட்.கோ(Wake Fit) என்கிற நிறுவனம் இரண்டாவது சீசனை துவங்கியுள்ளது. புதிய சீசனில் பங்கேற்று தூங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் உறக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள அந்நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக “ஸ்லீப் இண்டர்ன்ஷிப்” என்கிற வழக்கத்தை அந்நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எந்தவிதமான இடரும் இல்லாமல் ஒருவர் 9 மணிநேரம் தூங்க வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கம்.
மொத்தமாக 100 நாட்கள் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் தினமும் 9 மணிநேரம் தூங்க வேண்டும். அதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். இறுதியில் இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, இறுதிநாளில் ரூ. 10 லட்சம் அவருக்கு வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, வேக்ஃபிட்.கோ நிறுவனத்திற்கு இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவர்களுக்கு இரண்டு தகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஒன்று, ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், அடுத்ததாக படுக்க சென்ற 10 - 20 நிமிடங்களுக்குள் அவர் தூங்கிவிட வேண்டும்.
தூக்கத்துக்கு நீங்க ரெடியா?
இதுதொடர்பாக பேசிய வேக்ஃபிட்.கோ நிறுவனத்தின் நிறுவனர் சைத்தன்யா ராமலிங்க கவுடா, 2020ம் ஆண்டு மிக கடுமையான ஆண்டாக இருந்தது. இந்த கொரோனோ பெருந்தொற்றால் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கிகிடக்க நேரிட்டது. மேலும் வீட்டிலே பணி செய்தவர்கள் பல்வேறு அழுத்தங்களை சந்திக்க நேரிட்டது. இதனால் உறக்கம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. பலரும் நாள்கணக்கில் உறக்கம் வராமல் தவித்தனர். அதனால் உறக்கத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில் இந்த இண்டர்ன்ஷிப் ப்ரோகிராமை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தூங்கச் செல்லும் முன் நொறு வகைகள் எதையும் சாப்பிடக்கூடாது, காஃபி உள்ளிட்ட மது வகைகளை அவர்கள் அருந்தக்கூடாது, முறையான உடல்நலன் பெற்றிருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
தினமும் ஒன்பது மணிநேரம் உறங்குவதற்காக ஊதியம் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் வழக்கம் பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காட்டிலும் இந்நிறுவனத்தின் திட்டம் எளிமையாக உள்ளதாகவும். எளிதாக சம்பாதிக்க இது சிறந்த வழி என்று கமெண்டு செய்து வருகின்றனர்.