டெல்லியில் பிரபல ஊடக நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் அனிதா சவுத்ரி. இவர் டெல்லியில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றிற்கு சென்ற போது புடவை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய உணவு ஊழியர்கள் மேற்கத்திய உடை அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் ஹோட்டலின் நிர்வாகத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு நடந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் புடவையில் வருபவருக்கு அனுமதி இல்லை என்றும் மேற்கத்திய உடையில் வருவோருக்கு மட்டுமே நாங்கள் அனுமதி அளிக்கிறோம் என்று நிர்வாக ஊழியர்கள் பதில் கொடுத்துள்ளனர்.

இந்திய கலாச்சாரத்தை இழிவுப்படுத்தும் விதமாக செயல்பட்ட உணவகத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 

Tags: