இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் ஒமிக்ரான் கொரோனா.. ஒரே நாளில் 21 பேருக்கு பாசிட்டிவ் !

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் ஒமிக்ரான் கொரோனா.. ஒரே நாளில் 21 பேருக்கு பாசிட்டிவ் !

Update: 2021-12-15 10:15 GMT

தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது பரவிவிட்டது. மற்ற வகை கொரோனா தொற்றுகளை விட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மற்றவர்களுக்கு பரவும் தன்மைக்கொண்டது என்பதால், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கருதி இந்தியாவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

எனினும் இந்தியாவில் தினசரி ஒமின்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமையன்று இரவு வரை இந்தியாவில் 40 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது வரை 61 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

இதில், மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதால், அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.  இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3, ஆந்திரபிரதேசம் , சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் லண்டன் சென்று திரும்பிய ஒருவருடன் தொடர்ப்பில் இருந்ததால் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என மகாராஷ்டிரா மாநில சுகாராத துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News