இறக்கப்போவதை பேஸ்புக்கில் தெரிவித்த பெண் மருத்துவர் !!
இறக்கப்போவதை பேஸ்புக்கில் தெரிவித்த பெண் மருத்துவர் !!
மும்பை சேவ்ரி காசநோய் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்த மனிஷாவிற்கு சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதியானது.அதில் கொரோனாவில் இருந்து மீண்டு வரப்போவதில்லை என்று பிரியா விடை போஸ்ட் போட்ட 36 மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 51 வயதான மனிஷா ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தான் பிழைக்கமாட்டேன் என்பதை உணர்த்தும்விதமாக, இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம். இங்கு உங்களை நான் மீண்டும் சந்திக்கமுடியாமல் போகலாம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உடல் இறக்கலாம்; ஆனால் ஆத்மா அல்ல. ஆத்மா அழியாதது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த போஸ்ட்டை பதிவுசெய்த 36 மணிநேரத்தில் அவர் உயிரிழந்தது கமருத்துவர்களும், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in