பிரியங்கா காந்தியை ஆரத்தழுவிய பெண்காவலர்! வைரல் வீடியோ!!

பிரியங்கா காந்தியை ஆரத்தழுவிய பெண்காவலர்! வைரல் வீடியோ!!

Update: 2021-10-12 04:30 GMT

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களை நேரில் பார்க்கச் சென்றார் பிரியங்கா காந்தி. அவரை தடுத்து போலீஸ் காவலில் 28 மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்து பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் உ.பி. போலீசார்.

போலீசாருடன் பிரியங்கா காந்தியின் வாக்குவாத வீடியோ நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணிச்சலுடன் ஆவேசமான பிரியங்காவின் உருவத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்ததாகவே பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சாந்த சொரூபியாக கோவிலுக்குள் வலம் வந்த பிரியங்கா காந்தியை அங்கே கோவிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலர் ஒருவர் ஓடோடி வந்து கட்டிப்பிடித்து ஆரத்தழுவி அன்பைப் பொழிந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அடித்தட்டு மக்களுக்காக குரல் எழுப்பி வரும் பிரியங்கா காந்திக்கு வட மாநிலங்களில் செல்வாக்கு அதிகரித்து வருவதையே இந்த வீடியோ பிரதிபலிப்பதாக காங்கிரசார் பெருமிதம் அடைந்துள்ளனர்.


 

Tags:    

Similar News