“நிதியமைச்சருக்கு இது தெரியலை...” ; கண்டு பிடித்தார் எச். ராஜா..!
“நிதியமைச்சருக்கு இது தெரியலை...” ; கண்டு பிடித்தார் எச். ராஜா..!;
“தமிழக நிதியமைச்சருக்கு பொருளாதாரம் குறித்து தெரியவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசாங்கம் ரெடி; ஆனால், மாநில அரசு ரெடியா..?” என, எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிங்கம்புணரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சி இல்லை என்றால், கொரோனாவால் ஒரு கோடி பேருக்கு மேல் இறந்திருப்பார்கள். மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதில்லை.
தமிழக நிதியமைச்சருக்கு பொருளாதாரம் குறித்து தெரியவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வர மத்திய அரசாங்கம் ரெடி; ஆனால், மாநில அரசு ரெடியா என்பதை தமிழக நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும்.திராவிட இயக்கங்கள் மக்களைச் சுரண்டி தமிழகத்தை கடன் வலையில் சிக்க வைத்துள்ளன. தமிழகம் மாற்றத்தை நோக்கி திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது.
ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஏற்கெனவே வந்திருக்க வேண்டிய ஒன்று. திரையுலகில், தேசத்திற்கு எதிராகவும், தேச விரோதமாகவும் பேசுவதை கருத்துரிமையாக நினைப்பவர்கள்தான் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என அவர் கூறினார்.