திருப்பதி கோவிலில் இன்று முதல் ஆண்டாள் திருப்பாவை தான் ஒலிக்கும் !
திருப்பதி கோவிலில் இன்று முதல் ஆண்டாள் திருப்பாவை தான் ஒலிக்கும் !
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொற்று பரவல் குறைந்ததால் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நாள்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகளிடம் தேவஸ்தனம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விஷேசங்களில் முக்கியமான ஒன்றான தனுர்மாத விழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி இன்றுமுதல் முதல் நடத்தப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் திருப்பாவை பாடப்பட்டது.
இந்த மார்கழி மாதமான தனுர் மாதத்தில் சூரிய உதயத்திற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பு விஷ்ணுவுக்கு சிறப்பு பிரார்த்தனை திருப்பதியில் செய்கின்றனர். இந்த திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சியானது நாளை மார்கழி பிறப்பு துவங்கி, தை மாத பிறப்புக்கு முதல்நாள் வரை சிறப்புற நடைபெறும் என்பது குறிபிடத்தக்கது.
newstm.in