முதல் விழா.. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் மேடையில் கண் கலங்கிய அமைச்சர்.. வீடியோ !!

முதல் விழா.. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் மேடையில் கண் கலங்கிய அமைச்சர்.. வீடியோ !!

Update: 2022-01-04 20:30 GMT

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடிசிறுபாக்கம் அடுத்த கழுதூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். 

கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல கட்டுப்பாடுகளை விதித்து நிலைமையை மாற்றினார். முதல்வராக மு.க. ஸ்டாலின் பொற்றுபேற்ற 200 நாட்களில் 1,200 மக்கள் நலன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். 

6 மாதங்கள் பெய்ய வேண்டிய மழையின் அளவை, 6 நாட்களில் பெய்தது. இதனால், சென்னை உட்பட பல நகரங்கள் மழையால் பாதித்தது. அப்போது, திருச்சியிலிருந்து சென்னை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு செல்லாமல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் என தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து திடீரென அமைச்சர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மேடையில் இருந்தவர்கள் அவரை சமாதானம் படுத்தினர். 

அதாவது நிகழ்ச்சி நடந்தது அமைச்சரின் சொந்த ஊர் ஆகும். ஆனால், அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி இறந்த பிறகு சொந்த கிராமமான கழுதூரில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அவர் கண் கலங்கினார். மனைவியை இழந்த துக்கத்தில் கண் கலங்கிய அமைச்சர் சி.வி.கணேசனை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதை தொடர்ந்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அவர் வழங்கினார். இதனால் அங்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வாங்க வந்த மக்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். 


newstm.in

Similar News