இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் !!
இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் !!
வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நான்காவது கட்டமாக மே மாதம் முதல் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் உள்ளது. அங்கு தற்போது நாள்தோறும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிவருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் தடுப்பூசி போடும் பணியை துரிதமாகவும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் விரைவில் தடுப்பூசி கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in