இந்தியாவில் 100% தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம்! வதந்திகளை புறம்தள்ளி சாதனை!
இந்தியாவில் 100% தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம்! வதந்திகளை புறம்தள்ளி சாதனை!
கொரோனா இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முயற்சிகள் தீவிரமாகின.
நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொரோனா பரவலை தடுப்பது சிக்கலான விஷயமானது. அதுமட்டுமல்லாமல் அவர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளள செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆனால், மகாராஷ்டிராவின் ஜேன்ஃபால் என்ற கிராமம் இந்தியாவிலேயே 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 228 மைல் தூரத்தில் உள்ளது ஜேன்ஃபால் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் கணிசமான மக்கள் தொகையுடன் வசித்து வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி தொடங்கியப்போது, கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது. இதனால் அங்கு கிராமப்புறப்பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
ஆனால் ஜேன்ஃபால் கிராமத்திற்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் சென்றப்போது மக்கள் பெரியளவில் பயந்தனர். சுகாதாரத்துறையினரை பார்த்தாலே வீட்டிற்குள் சென்று கதவை பூட்டுக்கொண்டு வெளியே வர பயப்படுவார்கள் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து, கையில் தொற்று ஏற்பட்டு கையையே எடுக்கும் நிலை ஏற்படும் என வாட்ஸ்அப்களில் பரவிய வதந்திகளால் அச்சத்தில் மூழ்கினர்.
எனினும் சுகாதாரத்துறையினர் அவர்களிடம் விடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மூன்று மாதங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனால் அக்கிராமத்தின் தலைவர் முதல்நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். மூன்று மாதங்களுக்கு பிறகு. அதன்பிறகே மக்களுக்கும் ஒவ்வொருவருமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பயத்தில் இருந்தாலும் அதிகாரிகள் பேச்சைக்கேட்டு பலரும் தடுப்பூசி போட்டனர்.
தற்போது அந்த கிராமத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்படதாக அதிகாரிகள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர். அதேடு மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கு ஜேன்ஃபால் கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்துள்ளனர்.
தடுப்பூசி தயக்கத்திற்கு கூடுதலாக இந்தியாவின் கிராமப்புறங்களில் பல சவால்களால் உள்ளன. கிராமப்புற குடியிருப்பாளர்களுக்கான ஆன்லைன் பதிவுகள், குறைந்த டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் ஸ்மார்ட் போன் அணுகல், உள்ளூர் சுகாதார மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு கிராமவாசிகளை ஏற்பாடு செய்தல் போன்றவையும் அடங்கும். மேலும் வாட்ஸ்அப்களில் உலாவும் வதந்திகளும் மக்களை அச்சமூட்டுவதால் தயக்கம் ஏற்படுகிறது.
newstm.in