பிரபல நடிகரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!!

பிரபல நடிகரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!!

Update: 2021-12-26 10:00 GMT

வீட்டை விற்பதாக கூறி 50 லட்ச ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு பிரபல நடிகர் நாகசேகரிடம் பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரை உலகில் நாகசேகர் பிரபல நடிகர்.  பிரபல இயக்குனருமான இவர் மைனா உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இவர் பெங்களூரு ஆர். ஆர். நகர் பகுதியில் ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அந்த வீட்டை வாங்க திட்டமிட்டிந்தார்.

அந்த வீட்டின் உரிமையாளர் மீனாவை அணுகினார். ரூ. 2.70 கோடிக்கு விற்க இருப்பதாக மீனா சொல்லவும் அந்த தொகைக்கு வீட்டை வாங்குவதற்கு ஒப்புக் கொண்ட நாகசேகர், முன்பணமாக ரூ.  50 லட்சத்தையும் கொடுத்திருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீனாவை நேரில் சந்தித்த நாகசேகர் வீட்டை வாங்குவதற்கான பத்திரங்களை தயார் செய்து கொடுத்திருக்கிறார். மீனாவிடம் கையெழுத்து பெற முயன்ற போது தான் அவர் ஏற்கனவே வீட்டை  வேறொருவருக்கு விற்றுவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லாமல் இருந்துள்ளார்.  அவரிடம் வாங்கிய முன்பணமான ரூ.50 லட்சத்தை கேட்ட போது அதையும் திருப்பி கொடுக்க மறுத்திருக்கிறார்.   தொடர்ந்து பணம் கேட்டு சென்றபோது மிரட்டல் விடுத்து இருக்கிறார்.  அவருக்கு உடந்தையாக ராஜ்குமார் என்பவர் இருந்து செயல்பட்டிருக்கிறார்.

இதனால் வேறுவழியின்றி ஆர். ஆர் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மீனா,  ராஜ்குமார் இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர் .  

newstm.in

Similar News