டாஸ்மாக் கேட்டவரை செருப்பால் அடித்து, கடையை மூட வைத்த பெண்கள்!!
டாஸ்மாக் கேட்டவரை செருப்பால் அடித்து, கடையை மூட வைத்த பெண்கள்!!
தமிழகத்தில் இன்று பெண்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதில் டாஸ்மாக் மதுக்கடையும் ஒன்று. அதனால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ளும் பெண்களை, மாநிலத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடையால் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் உண்மை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை வேண்டும் என கூறிய நபரை பெண் ஒருவர் செருப்பால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொத்தமங்கலத்தில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அடித்து உடைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்த மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், மதுக்கடை அமைப்பதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தின் இடையே ஒருவர் மதுக்கடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
அப்போது ஆவேசமடைந்த பெண் ஒருவர் நபரை செருப்பைக் கொண்டு தாக்க முற்பட்டார். இதனால் அந்நபரும் அப்பெண்ணை தாக்க முற்பட்டதால் அந்த இடத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை தடுத்த போலீசார் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தை அடுத்து பேராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர்.
newstm.in