பட்டப்பகலில் தங்கச்சங்கிலி பறிப்பு.. பரபரப்பான சிசிடிவி காட்சி..!!
பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு.. பரபரப்பான சிசிடிவி காட்சி..!!
திருச்செங்கோடு அருகே பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கூட்டப்பள்ளி அருகே உள்ள வெள்ளாளர் காலனியை சேர்ந்த மூதார் மலர்கொடி(72). இவர், திருச்செங்கோட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். மதியம் 1 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி வந்து மலர்கொடியை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
newstm.in