கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றிய அரசு !!

கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றிய அரசு !!

Update: 2022-01-28 11:20 GMT

இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் டெனால்டு கிரான்ட்(25). தற்போது ஒரே நேரத்தில் இருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஆவார். 

அதாவது, டெனால்டின் காதலி கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரை ஜாமினில் எடுக்க பணம் தேவை என்பதால், அதே ஆண்டில் ஹோட்டல் ஒன்றிற்குள் டெனால்டு புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். இதில் ஏற்பட்ட மோதலில் இருவரை கொலை செய்தார். 

இந்த இரட்டை கொலை வழக்கில் டெனால்டு கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

இந்த நிலையில், தண்டனையை குறைக்க கோரி டெனால்டு பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது. இதையடுத்து நேற்று அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக டெனால்டு கிரான்ட்-க்கு மரண தண்டனை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், சாலைகளில் பூக்களை வைத்து டெனால்டு கிரான்ட் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

Similar News