முழு ஊரடங்கிலும் உயர்ந்த தங்கம் விலை !!

முழு ஊரடங்கிலும் உயர்ந்த தங்கம் விலை !!

Update: 2021-05-24 10:44 GMT

தங்கம் என்பது இந்தியாவில் வெறும் உலோகமல்ல சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என்ற நிலையில் அதன் விலையேற்றம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர் உயர்வும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 37 ஆயிரத்தை நெருங்குவதும்  தான் இதற்கு முக்கிய காரணம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,784-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 75,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News