பெண்களை மட்டும் கொலைச் செய்யும் கொடூர சைக்கோ!! திருப்பூரில் போலீசார் விசாரணை!!
பெண்கள் தான் குறி.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!
சேலத்தை தொடர்ந்து திருப்பூரில் ஒரு தொடர் கொலை அரங்கேறி வருகிறது. ஆனால் இந்த சைக்கோ வீடுகளில் அதிரடியாக புகுந்து பெண்களை கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். திருப்பூர் மாவட்டம் ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி ஜோதிலட்சுமி என்பரின் தலையில் மர்மநபர் ஒருவர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஜோதிலட்சுமியின் மருமகள் கலைவாணி எழுந்து வந்தார்.
அவரின் தலையிலும் கல்லால் பழமாக அடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்கவும் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். அங்கிருந்து தப்பிய அவர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து கொலை முயற்சி நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். வீடுகளில் கொள்ளை அடிக்கவில்லை, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை, ஆனால் கொலை செய்ததால் இந்த கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என போலீசார் அறிந்தனர். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் உடுமலையில் வைத்து சைக்கோ கொலையாளி ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in