கட்டிய புடவையை பாதியாக கிழித்து போஸ் கொடுத்த சின்னத்திரை பிரபலம்..!

கட்டிய புடவையை பாதியாக கிழித்து போஸ் கொடுத்த சின்னத்திரை பிரபலம்..!

Update: 2021-03-04 14:30 GMT

சின்னத்திரை நிகழ்ச்சிகள், குறும் படங்கள் மற்றும் டான்ஸ் ஷோக்கள் என பரபரப்பாக இருந்த நடிகை பவித்ரா லக்ஷ்மி, தற்போது குக் வித் கோமாளி சீசன்- 2வில் பங்கேற்றுள்ளதன் மூலம், மேலும் பிஸியாக இருக்கிறார். முன்னதாக பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். எனினும், குக் வித் கோமாளி ஷோ அவரை தமிழுகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளது. இதனால் அவருடைய சமூகவலைதள கணக்குகள், பதிவுகளை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணப்பெண் கோலத்தை ஃப்யூஷன் முறையில் மாற்றி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பவித்ரா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அப்போது அது பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் தற்போது பவித்ரா பிரபலமாகிவிட்ட காரணத்தால், அந்த ஃப்யூஷன் மணப்பெண் தோற்றம் பலரையும் ஈர்த்துள்ளது.

கையில் கத்திரிக்கோலுடன், தொடை வரை கட்டிய புடவையுடன் எடுக்கப்பட்டுள்ள பவித்ராவின் புகைப்படம் சில விவாதங்களையும் கிளப்பியுள்ளது. புது புடவையை இப்படி கிழிக்கலாமா..? மணப்பெண் கோலத்தை கேளி செய்கிறார்..! இது நவீனமாக இல்லை., சுத்த அபத்தம் என்பது சிலருடைய கருத்தாக உள்ளது.

பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பவித்ரா லட்சுமியின் இந்த தோற்றம் பெரும்பாலான நெட்டிசன்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான முயற்சி, கலையில் பேதம் பார்க்கக்கூடாது என்பன கருத்துகளை பதிவிட்டு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News