புற்றுநோய் பாதித்த 77 வயது முதியவரின் கடைசி ஆசை! வைரல் வீடியோ!!

புற்றுநோய் பாதித்த 77 வயது முதியவரின் கடைசி ஆசை! வைரல் வீடியோ!!

Update: 2021-12-11 09:57 GMT

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் புற்றுநோயால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இறுதிநாள் வரை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியை தேடுகின்றனர்.

அந்தவகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பனிச்சறுக்கு கற்றுக் கொண்டு விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த 77 வயது முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குச் சிறு வயதிலிருந்து பனிச்சறுக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் இந்த ஆசையை இவரால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். இதற்காகப் பனிச்சறுக்கு கற்றுக் கொண்டு, வாஷிங்டன் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கில் தனது ஆசிரியருடன் இளைஞரைப்போல் பனிச்சறுக்கு விளையாடி அசத்தியுள்ளார்.


முதியவரின் இந்த மகிழ்ச்சியான நிமிடத்தை அவரது மகள் வீடியோ எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Similar News