3 பேரை தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை!!

3 பேரை தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை!!

Update: 2022-01-25 06:30 GMT

திருப்பூர் மாவட்டம் பாபாங்குளத்தில் மூன்று பேரை  தாக்கிய சிறுத்தை சோளக்காட்டுக்குள் பதுங்கியிருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று அவிநாசி அடுத்த பாபாங்குளம் சோளக்காட்டு பகுதியில் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை அவரை தாக்கியதோடு, மொக்கையன் என்பரையும் தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கிவிட்டது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்ட வன அலுவலர் தேஜஸ்வி மற்றும் மாவட்ட வன உதவி அலுவலர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இருபுறமும் கூண்டு வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 6 வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடன் சோளக்காட்டிற்குள் சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோளக்காட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை மணிகண்டன் என்ற வன பாதுகாவலரை தாக்கிவிட்டு மீண்டும் காட்டிற்குள் சென்று பதுங்கியது.

இதனையடுத்து சோளக்காடு முழுவதும் வலைவிரித்து சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

newstm.in

Similar News