நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்: நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி..!

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்: நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி..!

Update: 2021-12-23 19:13 GMT

ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், திரையரங்கில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹூட் செயலி வழியாக ஆடியோ ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதில், “எதிர் விமர்சனம், மழை ஆகியவற்றை கடந்து ‘அண்ணாத்த’ வெற்றியடைந்துள்ளது. மழை இல்லையென்றால், படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்.

‘அண்ணாத்த’ வெற்றிக்கு இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோரின் நல்ல மனமே காரணம். பல இடர்களைத் தாண்டி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்தோம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான்” என்று கூறியுள்ளார்.

Similar News