பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தோழியை கரம் பிடித்தார்.. நெகிழ்ச்சியும் எதிர்ப்பும் !!

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தோழியை கரம் பிடித்தார்.. நெகிழ்ச்சியும் எதிர்ப்பும் !!

Update: 2021-12-14 08:59 GMT

பத்து ஆண்டுகால நட்புக்கு பிறகு பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தோழியை கரம் பிடித்தார்.   

திருப்பூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அந்தப் பகுதியில் உள்ள பனியன்  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 21 வயது இளம்பெண் கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதி நேரமாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் பள்ளி காலம் முதல் கடந்த 10 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர். இவர்கள் நட்பு நெருக்கமாக இருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் இருவரில் ஒரு பெண்ணின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இது குறித்து அவர் தனது தோழியிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றனர். அதன்முடிவில், உடலில் மாற்றம் ஏற்பட்ட  இளம்பெண் சிகிச்சைக்குப் பின் திருநம்பியாக மாறினார். அதோடு  தனக்கு ஆண் பெயர் சூட்டி கொண்டார். 
 


தோழிகளில் ஒரு பெண் திருநம்பியாக மாறியதையடுத்து, நட்பாக பழகி வந்த தோழிகள் இருவரும் காதல் வயப்பட்டனர். பின்னர் இருவரும் கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண்களின் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. பெண்ணின் பெற்றோர் திருநம்பியை திருமணம் செய்து கொண்ட தனது மகளை மீட்டு வர முயற்சி செய்தனர்.

இதையடுத்து பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் தெற்கு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இளம்பெண் மற்றும் திருநம்பியை விசாரித்த காவல் துறையினர் அவர்கள் மனப்பூர்வமாக விரும்பி திருமணம் செய்து கொண்டதை அடுத்து, பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தப்போதும் பலரும் இந்த தம்பதிக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News