சரக்கு தராததால் மதுக்கடைக்கு தீ வைத்த கும்பல்!!
சரக்கு தராததால் மதுக்கடைக்கு தீ வைத்த கும்பல்!!
சரக்கு தராததால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஒன்று மதுபானக்கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் பாட்டிலை வீசி தீவைத்துக் கொளுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையிலிருந்த ரூ.44 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாயின.
இந்த சம்பம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சங்கர் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று கடை மூடும்போது, மதுபாட்டில் கேட்டதால் ஊழியர்கள் தரமறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்ததால் இரண்டு பேரும் சேர்ந்து இரவு கடைக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் சங்கரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடன் இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
newstm.in