சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, நண்பர்களின் பாக்கெட்டை நிரப்ப மோடி அரசு வேலை செய்கிறது!!
சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, நண்பர்களின் பாக்கெட்டை நிரப்ப மோடி அரசு வேலை செய்கிறது!!
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ100ஐ தொட்டு விட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய, மாநில அரசுகளிடம் வேண்டுகோள்களும், கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நிதி அமைச்சரிடம் தெரிவித்த போது மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்தால் இதனை மாற்ற இயலும் எனத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை பொறுத்து 12 நாட்களாக உயர்த்தி வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும், சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில் "பெட்ரோல் நிலையங்களில் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, அங்குள்ள மீட்டர் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரவில்லை. வீழ்ச்சி அடைந்து வருகிறது.சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு மிகச் சிறப்பாக செய்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.