ஊரடங்கில் முற்றிய சண்டை.. கொரோனாவை பரப்ப வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

ஊரடங்கில் முற்றிய சண்டை.. கொரோனாவை பரப்ப வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

Update: 2021-06-03 16:20 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கு மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் உள்ளதால் அவ்வப்போது குடும்ப பிரச்னையில் ஏற்பட்டு வருகிறது. கணவன்- மனைவி, மாமியார்- மருமகள் என பல விதமான பிரச்னைகள் ஏற்பட்டு ஊரடங்கு காலத்திலும் போலீசாரிடம் சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் ஊரடங்கு காலத்தில் ஏராளமான திருமணங்கள் முடிந்துள்ளனர். குழந்தை பிறப்பு விகிதமும் பெண்கள் கருவுற்றிருப்பதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவர முடிவுகள் கூறுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கானாவில் மாமியார்- மருமகளுக்கு இடையே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தெலுங்கானா மாநிலத்தில் மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் மாமியார். ஊருடங்கு காரணமாக மாமியார் - மருமகள் ஒரே வீட்டில் இருந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையிலான சண்டை, சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளியே கடைக்கு சென்று வந்த நிலையில் மாமியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

மாமியாருக்கு கொரோனா என்பதால் அவரிடம் சமூக விலகலை கடைப்பிடித்து விலகியே இருந்து வந்திருக்கிறார் அதே வீட்டில் வசித்து வரும் அவருடைய மருமகள். இதனை பிடிக்காத மாமியார், தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென்றதால் வேண்டுமென்றே தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து வந்திருக்கிறார். மேலும் அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார்.

இதன் காரணமாக மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனையே காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியிருக்கிறார். வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஆனால் அப்பெண்ணின் கணவர் நிலையை யாரும் நினைத்து பார்க்கவில்லை என்பது இங்கு குறிப்பிடவேண்டியது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒரிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News