சக்திமான் நடிகர் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தியே !!

சக்திமான் நடிகர் காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தியே !!

Update: 2021-05-12 18:48 GMT


90 ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்த முகேஷ் கண்ணா சற்று நேரம் முன் காலமானார் என்று வெளியான செய்தி வெறும் வதந்தியே.
 
சக்திமான் தொடரின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் முகேஷ் கண்ணா. 90s கிட்ஸ் உடைய மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்று சக்திமான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் தொடராக சக்திமான் அமைந்தது. சினிமா நடிகர்களுக்கு இணையான புகழையும் நடிகர் முகேஷ் கண்ணா பெற்றார். 

இந்நிலையில் 90 ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவான சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா மரணமடைந்தார் என்ற வதந்தி காட்டு தீ போல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து முகேஷ் கண்ணாவிற்கு நெருக்கமான பலரும், அவரை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இது வதந்தி என்றும் யாரும் நம்ப வேண்டாம் எனவும்  ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் தான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News