சீனாவை தாக்கிய அடுத்த கொடூரம்! H5N1 வைரஸால் மக்கள் பீதி!
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது சீனாவில் படு மோசமான பறவை காய்ச்சல் நோய் இன்னொரு கொடூர வைரஸ் மூலமாக பரவி வருகிறது.
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது சீனாவில் படு மோசமான பறவை காய்ச்சல் நோய் இன்னொரு கொடூர வைரஸ் மூலமாக பரவி வருகிறது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஷாயாங் நகரத்திற்கு அருகில் பண்ணை ஒன்றில் இந்த பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது சீன மக்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
சீனாவில் தற்போது பறவைக் காய்ச்சல் நோய் பரவிவருவதை சீனாவின் வேளாண் அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 7,850 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள ஊழியர்கள் அந்த 4,500 கோழிகளையும் கொன்றுள்ளனர்.
மேலும் 20,000 பறவைகளை நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. H5N1 என்ற இந்த வைரஸ் பறவைகளுக்கு கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும் என்றும், மனிதர்களுக்கும் தொற்றும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது சீனாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
newstm.in