அடுத்த அதிர்ச்சி! புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!!

அடுத்த அதிர்ச்சி! புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!!

Update: 2022-01-02 09:45 GMT

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மற்றும் இன்புளூயன்சா வைரஸ் இணைந்து இரட்டை தொற்று ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டெல்டா என உருமாற்றம் அடைந்தது.

முதல் அலையைவிட இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதன் பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மற்றும் இன்புளூயன்சா வைரஸ் இணைந்து இரட்டை தொற்று ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் ராபின் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றும், இன்புளூயன்சா எனப்படும் காய்ச்சல் தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரட்டை நோய் தொற்றை ஃபுளோரனா என இஸ்ரேல் மருத்துவர்கள் அழைக்கின்றனர். இஸ்ரேலில் ஏற்கெனவே நான்காவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Similar News