மாஸ்டர் படத்தால் லோகேஷ் கனகராஜிடம் உஷாரான கமல் - அடுத்து செய்த காரியம்..!!
மாஸ்டர் படத்தால் லோகேஷ் கனகராஜிடம் உஷாரான கமல் - அடுத்து செய்த காரியம்..!!
மாஸ்டர் படம் தந்த அனுபவத்தால் உஷாரான கமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படத்தில் முழு கதையையும் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் மாஸ்டர் படம் வெளியானதை அடுத்து பல நடிகர்கள் அவருடைய படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் அவர் செய்த ட்விஸ்டு தான்.
பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் படம் அனைவரும் விஜய் படம் என்று தான் தியேட்டருக்கு சென்று பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த பிறகு அது விஜய் சேதுபதி படமாக மனதில் பதிய, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் மாஸ்டர் வெற்றி படமா..? இல்லையா..? என்பது இதுவரை புரியாத புதிர் தான்.
மாஸ்டர் படத்தை பார்க்காமல் தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குநராக லோகேஷ் கனகராஜை அறிவித்துவிட்டார் கமல். இவர்கள் இணையும் படத்திற்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘விக்ரம்’ படத்திற்கான வேலைகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து கமலுக்கு தெரியவந்துள்ளது. அதனால் லோகேஷ் கனகராஜை அழைத்த கமல், விக்ரம் படத்தின் முழு கதையையும் கொண்டுவரும் படி உத்தரவிட்டுள்ளார். காரணம், இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் படத்தில் வையிடேஜ் அவர் பக்கம் சாயாமல் இருக்க, கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அயராத அரசியல் பணிகளுக்கு இடையில் கமலுக்கு எழுந்துள்ள இந்த யோசனையை கண்டு லோகேஷ் கனராஜ் கலக்கத்தில் உள்ளாராம். விக்ரம் படத்தின் கதை என்ன என்பதை நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.