மலையாள திரையுலகில் செம்பன் வினோத் ஜோஸ் மிகவும் பிரபலமான நடிகர். இவருக்கு சுனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த வாரம் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.


விவாகரத்தாகி ஒரே வாரத்தில் அடுத்த திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செம்பன் வினோத். மன நல ஆலோசகரான மரியம் தாமஸ் என்ற பெண்ணை தனது சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விவாகரத்தாகி ஒரே வாரத்தில் திருமண  குறித்து செம்பன் வினோத் தெரிவித்துள்ளதால் அவர் ரசிகர்கள் மற்றும் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Tags: