மனைவியை அடித்தே கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்ட அதிகாரி! திருமணமான ஓராண்டில் நடந்த பயங்கரம் !!
மனைவியை அடித்தே கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்ட அதிகாரி! திருமணமான ஓராண்டில் நடந்த பயங்கரம் !!
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நிலமேல் பகுதியில் திரிவிக்ரமன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மகள் விஸ்மயா (26) கொல்லத்தில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விஸ்மயாவுக்கும் சூரநாட்டைச் சேர்ந்த கிரண்குமாருக்கும் கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் நடந்தது. கிரண்குமார் மோட்டார் வாகன துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம், 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான காரும் வழங்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண்குமார் கொடுமைப்படுத்தி வந்து உள்ளார். அதன்படி தனக்கு நல்ல கார் வாங்கி தரவில்லை என்று கூறி அடித்து சித்ரவதை செய்து வந்து உள்ளார். தொடர்ந்து நீடித்ததால் அவர் இதற்கு முடிவுகட்ட முடிவுசெய்தார்.
இதனால் விஸ்மயா தனது உடலில் ஏற்பட்ட காயங்களை போட்டோ எடுத்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இதேபோல் தனது கணவர் கொடுமைப்படுத்துவதையும் அவர் தெரிவித்து வந்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை விஸ்மயா வீட்டு குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், கிரண்குமாரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு உள்ளனர் என்றும் விஸ்மயாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிததுள்ளனர். இதையடுத்து போலீசார் கிரண்குமாரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in