சர்ச்சில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்! விசுவாசிகள் அதிர்ச்சி!

சர்ச்சில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்! விசுவாசிகள் அதிர்ச்சி!

Update: 2021-04-20 13:33 GMT


சென்னை ஆவடியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஜெபம் செய்த பெண்ணை மதபோதகர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்த  மத போதகர் ஸ்காட் டேவிட் (53) அந்த பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதனை செய்து வந்தார்.

அதே போல் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வதையும் அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த ஏஞ்சலின் (42) என்ற பெண்ணின் வீட்டிற்கு மதபோதகர் ஸ்காட் டேவிட் ஜெபம் செய்ய சென்றுள்ளார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர் தேவாலயத்திற்கு வருமாறு ஏஞ்சலினை அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் கடந்த 17ஆம் தேதி தேவாலயத்திற்கு செனஅறு ஜெபர் செய்து கொண்டிருந்தார்.

அப்போது பின்பக்கமாக சென்ற மதபோதகர் ஸ்காட் டேவிட் ஏஞ்சலினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் அங்கிருந்து தப்பி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மதபோதகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News