ரயில் பக்கத்தில் வந்ததும் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நபர்.. பரபரப்பு வீடியோ

ரயில் பக்கத்தில் வந்ததும் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நபர்.. பரபரப்பு வீடியோ

Update: 2022-01-03 16:53 GMT

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற, ரயில் ஓட்டுநர் திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போது பயணிகள் ரயில் சேவை பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் தண்டவாளம் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். பின்னர் ரயில் அருகில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார்.

ஆனால் ரயில் அருகில் வந்துவிட்ட நிலையில், ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினர். இந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் விலைமதிப்பற்றது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பலரும் ரயில் ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலைக்கு முயன்றவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.


newstm.in

 

Tags:    

Similar News