ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டவர் அடித்துக்கொலை.. பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல் !
ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டவர் அடித்துக்கொலை.. பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல் !
வீட்டிற்கு வெளியே ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டுகேட்ட நபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் குன்னர் (40). இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆசிப் அலி (25) என்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சுரேஷிடம் ஸ்பீகர் சத்தம் அதிகமாக உள்ளது எனவும், ஒலி அளவை குறைத்து வைக்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேஷ் கூறியுள்ளார்.
இதற்கு ஆசிப் அலி எதிர்த்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் குமாரை ஆசிப் அலி கடுமையாக தாக்கியுள்ளார். அவரது தலையை பிடித்து தரையில் அடித்துள்ளார். இதில் சுரேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனால் பதற்றம் அடைந்த ஆசிப் அலி அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக, அக்கம்பக்கத்தினர் சுரேஷ்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுரேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஆசிப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in