நெகிழ்ச்சி சம்பவம்..மயங்கிய குரங்கை தனது மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றிய கார் டிரைவர்..!!
நெகிழ்ச்சி சம்பவம்..மயங்கிய குரங்கை தனது மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றிய கார் டிரைவர்..!!
நாய் கடித்து மயங்கிய குரங்கை கார் ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து காற்று கொடுத்து உயிர் பிழைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குரங்கு ஒன்றைத் தெரு நாய்கள் துரத்திக் கடித்துள்ளது.
இதில் அந்த குரங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியது. இதைப்பார்த்த பிரபு குரங்குக்கு தண்ணீர் கொடுத்தார். ஆனால் குரங்கு தண்ணீர் குடிக்கவில்லை.
உடனடியாக அவர் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு துள்ளி எழுந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
A 38-year-old man from #Perambalur tried to resuscitate a wounded monkey by breathing into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart pic.twitter.com/iRMTNkl8Pn
— Thiruselvam (@Thiruselvamts) December 12, 2021
அங்கு குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குரங்கை வனத்துறையிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து கார் ஓட்டுநர் பிரபுவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in