ஒரே சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருட முயற்சித்த நபர் விடுதலை!!
ஒரே சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருட முயற்சித்த நபர் விடுதலை!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ரே லோமாக் என்ற நபர் சியாட்டி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றார். பின்னர் 70 இன்ச் டி.வியுடன் அவர் வெளியேவந்துள்ளார். இதைப்பார்த்த சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர்கள் அவரிடம் டி.வி வாங்கியதற்கான ரசீதைக் கேட்டுள்ளனர்.
அப்போது, அவர் டி.வியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். இதையடுத்து அவர்கள் ஜான்ரே லோமாக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கடந்த மூன்று மாதங்களில் இதே சூப்பர் மார்க்கெட்டில் 22 முறை திருட முயற்சித்துள்ளார் என்றும், கடந்த மாதம்தான் டிவி ஒன்றைத் திருட முயன்றபோது மாட்டிக் கொண்டார் எனவும் தெரியவந்தது.
இதனால் அவரை இந்த கடைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் டிவியை திருட முயற்சி செய்து மாட்டிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ஜோன்ரே லோமாக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் வீடற்றவர் என்பதால் நீதிபதி லோமாக்கை விடுவித்து உத்தரவிட்டார். இதனால் அவரை போலீஸார் விடுதலை செய்தனர்.
newstm.in