அலட்சியத்தின் உச்சம்! அடி பம்ப்-ஐ அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை!!

அலட்சியத்தின் உச்சம்! அடி பம்ப்-ஐ அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை!!

Update: 2022-01-04 06:15 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடிபம்ப்-ஐ அகற்றாமலேயே நகராட்சி நிர்வாகம் புதிய தார் சாலை அமைத்திருப்பது அலட்சியத்தில் உச்சமாக பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 8ஆவது வார்டு பகுதியில் புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் உள்ளது.இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக அடிபம்ப் செயல்படாமல் இருந்து வருகிறதுஇந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 8ஆவது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமல்  அப்படியே தார் சாலை அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் அடி பம்ப் காட்சியளிக்கிறது.

அலட்சியமாக சாலை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் இந்த அடிபம்ப் உள்ளது. எனவே விரைந்து அடி பம்ப்-ஐ அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Similar News