சினிமா பட பாணியில் குற்றவாளியை மஃப்டி உடையில் மடக்கி பிடித்த காவல்துறை..!

சினிமா பட பாணியில் குற்றவாளியை மஃப்டி உடையில் மடக்கி பிடித்த காவல்துறை..!

Update: 2021-07-02 11:48 GMT

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை சாலையோரம் இருந்த உணவகத்தி வைத்து போலீசார் கைது செய்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி திருட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 14 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். அமர்புரா பகுதியிலுள்ள சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குற்றவாளியை வளைத்துப் பிடித்துள்ளது காவல்துறை. கைது செய்யப்பட்ட போது குற்றவாளியிடம் கை துப்பாக்கி இருந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில் கைது செய்யப்பட்ட கிஷோர் லுகாருடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள விபரமும் தெரிய வந்துள்ளது. உணவகத்திற்குள் அமைதியாக வரும் 5 முதல் 7 காவல்துறையினர் வேறு வேறு இடங்களில் அமர்கின்றனர். அதை தொடர்ந்து திடீரென அவர்கள் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்கின்றனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Full View

கடந்த 27-ம் தேதி நடைபெற்ற இந்த அதிரடி கைது சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் லுகார் அகமதாபாத் நகரத்தில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். மேலும் இந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவராக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News