ராக்கெட் வேகத்தில் போகும் தங்கத்தின் விலை!!

ராக்கெட் வேகத்தில் போகும் தங்கத்தின் விலை!!

Update: 2022-01-15 07:45 GMT

தங்கம் நேற்று ஒரு சவரனுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் 16 உயர்ந்து விற்பனையான நிலையில் நேற்று திடீரென அதிகரித்தது.

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் விலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் விலை உயர்ந்தது.

சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,531 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை மாலை இதன் விலை ரூ. 4,521ஆக இருந்ததுஇந்நிலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்தது.

அதன்படி, வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ரூ.36,168க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று ரூ. 80 உயர்ந்து ரூ.36,248க்கு விற்பனையானதுஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4,531க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ரூ. 65.80க்கு விற்பனை ஆன நிலையில் நேற்று கிராமுக்கு ரூ. 0.20 உயர்ந்து 66.00 விற்பனை செய்யப்பட்டது.

newstm.in

Similar News