கொரோனாவை குணப்படுத்த உதவும் மருந்தின் விலை அதிரடியாக குறைப்பு !!

கொரோனாவை குணப்படுத்த உதவும் மருந்தின் விலை அதிரடியாக குறைப்பு !!

Update: 2021-04-18 06:00 GMT

ரெம்டெசிவர் ஊசிகளின் விலை 1000 முதல் 2700 ரூபாய் வரை குறைத்து அம்மருந்தினை தயாரிக்கும் 7 நிறுவன அறிவித்துள்ளன.
  
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டு தாக்கிய முதல் அலையை விட இப்போது மிக வேகமாகவும் வீரியமாகவும் கொரோனா வைரஸ் பரவி வருது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனொரு பகுதியாக இந்தியாவில் கொரோனா எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக அம்மருந்து விற்பனை மற்றும் விலை தொடர்பாக புகார்கள் எழுந்து வருகின்றன. 

இந்தநிலையில், ரெம்டெசிவர் மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள், அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று தானாக முன்வந்து அதன் விலைகளைக் குறைத்துள்ளன என்று தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம் (NPPA) அறிவித்தது. இதன் காரணமாக ஏழு பிராண்டுகளின் ரெம்டெசிவர் ஊசி மருந்துகளின் விலை தற்போது 100 மில்லி கிராம்க்கு, ரூபாய் 1,000 முதல் 2,700 வரை  குறைக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, காடிலா ஹெல்த்கேரின் ரெம்டாக்கின் ரெம்டெசிவர் ஊசி ரூ.899-க்கு விற்பனையாகும், இந்த ஊசி முன்பு 2,800 க்கு விற்கப்பட்டது.  அதேபோல், பாரத் பயோலாஜிக்ஸ் இந்தியாவின் சிஞ்சின் இன்டர்நேஷனலின் ஊசி, இப்போது ரூபாய் 3,950 க்கு பதிலாக 2,450 க்கும், டாக்டர் ரெட்டியின் ரெடிக்ஸ் இப்போது 5400க்கு பதிலாக  2,700க்கும், சிப்லா ஊசியின் விலை 4,000இல் இருந்து 3,000-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மைலன் பார்மாசியூட்டிகல் ரெம்டெசிவர் மருந்தின் விலை 4800 ரூபாயிலிருந்து 3400 ஆக குறைந்திருக்கிறது. ஜுபிலண்ட் ஜெனரிக்ஸ் மருந்தின் விலை 4700 இல் இருந்து 3400 ஆக குறைந்தும், ஹெடெரோ ஹெல்த்கேர் ரெம்டெசிவர் ஊசியின் விலை 5400 ரூபாயிலிருந்து 3490 ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது என NPPA கூறியுள்ளது. 

இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்த முடியும் என்பதோடு கொரோனாவில் சிக்கியவர்களை எளிதாக குணப்படுத்த முடியும் எனவும் நம்பப்படுகிறது.

newstm.in


 

Tags:    

Similar News