சிறுமியை கர்ப்பமாக்கிய அர்ச்சகர்.. போக்சோவில் அள்ளியது போலீஸ்..!

சிறுமியை கர்ப்பமாக்கிய அர்ச்சகர்.. போக்சோவில் அள்ளியது போலீஸ்..!

Update: 2022-01-27 19:56 GMT

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெட்டேகுள்ளி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரிடம் துருவித் துருவி பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சிறுமி அடிக்கடி சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது, கோயில் அர்ச்சகரான ரவி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சிறுமியை, அர்ச்சகர் ரவி ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதற்கிடையே விஷயம் தெரிந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், ஆஷா ஊழியர்கள் சாம்ராஜ்நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மைனர் பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய கோவில் அர்ச்சகர் ரவியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.

Similar News