விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்..!!

விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்..!!

Update: 2021-07-10 06:35 GMT

டோக்கியோ-2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய குழுவினரின் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர்களுடன் பிரதமர் ஜூலை 13ம் தேதி கலந்துரையாடுகிறார்.

இது குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய குழுவினரின் வசதிகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். அவர்களுக்கான பொருட்கள், தடுப்பூசி போடப்பட்டதன் நிலவரம், அவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு ஒழுங்கு ஆதரவு குறித்து ஆலோசித்தோம்.

130 கோடி இந்தியர்கள் சார்பில், ஒலிம்பிக் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அவர்களிடம் நான் ஜூலை 13ம் தேதி கலந்துரையாடவுள்ளேன். நாம் அனைவரும் இந்தியாவுக்காக மகிழ்ச்சியை தெரிவிப்போம்’’ என குறிப்பிட்டுள்ளார்.


 

Tags:    

Similar News