இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி!

இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி!

Update: 2021-04-08 20:42 GMT

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. அந்த வகையில் பல நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. அமெரிக்க நிறுவனமான மாடர்னா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து தங்கள் நாட்டு மக்களுக்கு நேற்று முதல் செலுத்தத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில்  ஃபைஸா்-பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் 3வது மாடா்னா தடுப்பூசிகள் இணைந்திருப்பதால் இன்னும் விரைவாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காமாஷ் தன்ஷையா், வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த  நோயாளிகளுக்கு முதல்முறையாக  மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News