ஒலிம்பிக் சென்று திரும்பிய வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! மகளின் கனவுக்காக துயரத்தை மறைத்த தாய்..!

ஒலிம்பிக் சென்று திரும்பிய வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! மகளின் கனவுக்காக துயரத்தை மறைத்த தாய்..!

Update: 2021-08-09 04:55 GMT

திருச்சி குண்டூரைச் சேர்ந்த தமிழ்நாடு தடகள வீராங்கனையான தனலட்சுமி, பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக் தகுதி சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டப் பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்த தனலட்சுமிக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

போட்டிக்கும் தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தங்கியிருந்த தனலட்சுமி அங்கிருந்தே டோக்கியோவுக்கும் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தனலட்சுமியின் சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால், போட்டியிலிருந்து கவனம் சிதறி விடும் என எண்ணிய அவரது தாயார் உஷா, தெரியப்படுத்தாமலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து தமிழ்நாடு திரும்பிய தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, தான் தனலட்சுமிக்கு தனது அக்காள் இறந்துவிட்ட செய்தி தெரியவந்துள்ளது. தன்னுடைய கனவுக்காக கஷ்டப்பட்ட அக்காளை இழந்து விட்டது தெரிந்து, மனமுடைந்த தனலட்சுமி விமானநிலையத்திலேயே கதறி அழுதார்.

Tags:    

Similar News