தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த பிரபல நடிகரின் தங்கை காங்கிரஸில் இணைந்தார் !
தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த பிரபல நடிகரின் தங்கை காங்கிரஸில் இணைந்தார் !
நடிகர் சோனு சூட் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகம் ஆனவர் என்றாலும், நாடு முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது கொரோனா தான். கொரோனாவா? அப்படி கேட்கலாம். உண்மையில் அவர் கொரோனா காலத்தில் செய்த உதவிகள் தான் அவரை நாடு முழுவதும் பிரப்படுத்தியது. இதுதான் உண்மை.
நடிகர் சோனு சூட் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முறை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்ததில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதையடுத்து கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம், சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் தேர்தல் ஆணையம், சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னமாக நியமிக்கப்பட்டதை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இதுகுறித்து நடிகர் சோனு சூட்விடம் கேட்கப்பட்டது. தனது தங்கை மாளவிகா சூட் தேர்தலில் போட்டியிடுவதால், பஞ்சாப் மாநிலத்தின் அடையாளம் சின்னம் என்ற பொறுப்பிலிருந்து தானாக முன்வந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும் மாளவிகா சூட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை வீட்டில் சந்தித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சோனு சூட் அவரது மனிததன்மைக்கும், அன்பிற்கும் பெயர் போனவர். அவரது பெயரை உலகம் அறியும். இன்று அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in